மண்டைதீவு படுகொலையின் 33வது நினைவுநாள் இன்று!

1986 ஜூன் 10ம் திகதி குருநகர் துறையில் இருந்து தூயஒளி படகு 31 மீனவர்களுடன் தொழிலுக்கு புறப்பட்டது. முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் 27 மீனவர்கள் இறங்கினார்கள். நால்வர் படகில் நின்றனர்.
இதன்போது, கொலை ஆயுதங்களுடன், ஈழத்தமிழர் வரலாற்றில் இரணமாக பதிந்த இன்னொரு கொலை அத்தியாயத்தை எழுத, சிறியரக போர்க்கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கினர் இலங்கை கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலில் நிற்கும்படி மிரட்டினார்கள்.
பின்பு கோடரி, வாள், கத்தி பொல்லாலும் துவக்குப் பிடியாலும் வெட்டியும் கொத்தியும் அடித்தும் 31 பேரையும் கொன்றனர்.
மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய் மாறியது.
அவர்களது சடலங்கள் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு அருகாகவுள்ள கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது.
1986ம் ஆனி பத்தாம் திகதி. யாழ்ப்பாணம் குருநகர் ஒவ்வொரு வீடுகளிலும் சோகம் பற்றிப் படர்ந்து கொண்டிருந்த நாள்.