சுதந்திரபுரம் படுகொலை செய்யப்பட்டவர்களின் 21வது நினைவு நாள்!

வன்னியினை இரண்டாக பிரிக்கும் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை 1997 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர். சந்திரிக்கா அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் சிறிலங்காவின் அப்போதைய இராணுவத்தளபதி றொகான் தளுவத்த தலைமையில் ஏ9 பாதையூடாகவும் பழைய கண்டி வீதி ஊடாக அம்பகாமம் வரைக்கும் ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் ஆக்கிரமித்திருந்தனர். மறுபக்கம் சத்ஜெய நடவடிக்கை மூலம் கிளிநொச்சி வரைக்கும் ஆக்கிரமித்திருந்தனர்.
1998ஆம் யூன் 10 ஆம் திகதி பொதுமக்கள் மீதான வெறியாட்டம் ஒன்றினை இலங்கை தரைப்படைகள் மற்றும் விமானப்படையினர் நிகழ்த்தியிருந்தனர். இதில் 33 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டுக்கும் வள்ளிபுனத்திற்கும் இடைப்பட்ட பிரதேசமே சுதந்திரபுரம் ஆகும். இக்கிராமம் 2009 இறுதியுத்தகாலப்பகுதியில் பெருமளவான மக்கள் எறிகணைத்தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும்
யாழ்.இடப்பெயர்வின் பின்னர். இக்கிராமத்தின் சனத்தொகை அதிகரித்திருந்தது. போரின் உச்சக்கட்டமாகவே அந்நேரத்தில் பேசப்பட்டது. ஒரு பக்கம் பொருளாதார தடை மறுபக்கம் தாக்குதல்கள் என மக்கள் வாழ்வாதாரங்களுக்காக சிரமப்பட்டிருந்தன நேரமது.
அன்று காலை 9.15 மணி தொடக்கம் 11.30 மணிவரை விமானங்கள் மற்றும் எறிகணைகத்தாக்குதல்களால் பொதுமக்கள் பாதுகாப்பு தேடிகொள்ளமுடியாத அளவிற்கு இருந்திருந்தது. வன்னியில் இருவழித்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று. ஆனையிறவு, அம்பகாமம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரும் விமானப் படையினரும் இணைந்து இப் பகுதியில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதலையும், விமானத் தாக்குதலையும் நடத்தினார்கள்.
அன்றையநாளில் வடமாராட்சியைச்சேர்ந்த ரமேஸ் அண்ணை “ தம்பியும் நானும் ஒன்றாகதான் வேலை செய்தோம். தம்பி காயமடைந்திட்டான். நிறையபேர் செத்திட்டினம். நான் தம்பியை தூக்கிக்கொண்டு எங்க போறது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தன். என்னால ஒரு கட்டத்தில் ஓடமுடியல. அயலவர்களில் உதவியுடன் வீதிக்கரைக்கு கொண்டுவரும் போதே தம்பி செத்திட்டான்.” என்று தெரிவித்தார். ரமேஸ் அண்ணையும் அவரது தம்பியும் தையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தாக்குதலில் எனக்கு தெரிந்த பலர்; கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொல்லப்ப்பட்டோர் விபரம்;
01.இராஜகோபாலன் ரவிச்சந்திரன்
02.இராமு இரட்ணலிங்கம்
03.இராசலிங்கம் உதயகுமார்
04.இரத்தினசிங்கம் இராணிமலர்
05.நவக்குமார் கோகிலா
06.நவராசா கிருஸ்ணமூர்த்தி
07.கந்தையா குணசேகரம்
08. புஸ்பநாதன் சதீஸ்
09. புஸ்பநாதன் கலைச்செல்வி
10. புஸ்பநாதன் தேவநந்தினி
11. புஸ்பநாதன் சத்தியசீலன்
12. புஸ்பநாதன் ரமேஸ்குமார்
13.பழனிவேல் திருச்செல்வி
14.மனுவல் தேவதாஸ்
15.முத்துத்தம்பி வசந்தகுமாரி
16.முத்துவேல் ஞானசேகரம்
17.அமிர்தலிங்கம் சுதா
18.ஆசிர்வாதம் பாத்திமா
19.அற்புதம் ஜெகன்
20. ஜேபன்
21.பொன்னன் சுரேஸ்குமார்
22.செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்
23.செல்வராசா சிறிதரன்
24.வெள்ளையப்பன் சுப்பையா
25.சாட்செறோன் கொண்செட்டா
26.சாணக்குட்டி யோகபாலசிங்கம்
27. சின்னத்துரை
28.சின்னத்துரை சுதாகரன்
29.சிதம்பரப்பிள்ளை குமாரவேல்
30.விநாயகமூர்த்தி தேவகரன்
31.விக்கினேஸ்வரன் நேசராணி
32.வல்லிபுரம் ராணிமலர்
33.றிச்சாட் செறோன்கொன்சென்றர்
சுரேன்_கார்த்திகேசு