ஐக்கியதேசிய கட்சியின் அரசியல் வியாபரம்..! 3மணி நேரம் காத்திருந்த மக்கள்..

வவுனியா , மன்னார் மாவட்டங்களை சோ்ந்த சமுா்த்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்விற்காக காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரையும் ஆயிரக் கணக்கானோர் காத்திருக்க வைக்கப்பட்டதாக மக்கள் கடும் விசணம் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் புதிதாக சமுர்த்தி பொடுப்பனவு அனுமதிக்கப்பட்ட பயணாளிகளிற்கு சமுர்த்தி பட்டியல் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நேற்றைய தினம் இடம்பெறும் என கடந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் , படியாளர்கள் , பயனாளிகள் என சுமா் ஆயிரம் பேர் காலை 9 மணிக்கு கூடியிருந்தனர். இந்த நிலையில் காலை 11 மணிவரை அமைச்சர் வருகை தராத நிலையில் இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கான நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதனால்
நிகழ்வை ஒரு மணி வரை ஒத்தி வைக்குமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் அனைவரையும் மீண்டும் 12 மணிக்கு கூடுமாறு கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் 12.30 மணிக்கு நிகழ்விற்காக அனைவரும் கூடினர்.
இந்த நிலையிலும் மாலை 3 மணி வரைக்கும் அமைச்சர் குழாம் சமூகமளிக்கவில்லை. இதனால் சமுர்த்தி பட்டியலிற்காக பயணாளிகள் , உத்தியோகத்தர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நாள் முழுவதும் காத்திருந்தனர்.