இன்று வருகிறாா் மனோ..! என்ன நடக்கும் என மக்கள் எதிா்பாா்ப்பு.

முல்லைத்தீவு செம்மலை- நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரம் மற்றும் திருகோணமலை கண்னியா வென்னீரூற்று விவகாரம் ஆகியவை தொடா்பாக ஆராய்வதற்கு அமைச்சா் மனோகணேசன் இன்று  முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளாா்.
திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவுக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கும், அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள பணிப்புரைகளின்படி இரு மாவட்ட செயலகங்களினதும் அனைத்து தரப்புகளையும் அழைத்து கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணிக்கு திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பிலும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பிலும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.