பேரூந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்ததில் 2 பேர் பலி!

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான அரசபஸ்ஸின் மிதிபலகை கடுகண்ணாவை பகுதியில் வைத்து உடைந்து வீழ்ந்ததில் பஸ் நடத்துனரும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.

முன்பக்க மிதிபலகை உடைந்து வீழ்ந்ததில் அதில் நின்ற இருவரும் முன்சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சம்மாந்துறையை சேர்ந்த சேகர் என்ற நடத்துனரே இவ்வாறு உயிரிழந்த மற்றவரின் தகவல்கள் வெளியாகவில்லை

இந்நிலையில் நடத்துனரின் சடலம் ஹேநாவலை வைத்தியசாலையிலும் மற்றவரின் சடலம் மாவனல்லை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.