ஜனாதிபதி வழங்கிய பதவியை நிராகரித்தார் அசாத் சாலி!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட தூதுவர் பதவியை மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நிராகரித்துள்ளார்.இதனை அவர் உறுதிப்படுத்தியுடன் பதவிகள் தந்து என்னை வாங்க முடியாது எனவும் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
“அத்துடன், அடுத்த வாரம் அசர்பைஜான் நாட்டுக்கு செல்லும் குழுவிலும் என்னை ஜனாதிபதி இணைத்தார். எனினும் வரமுடியாது எனக்கூறி விட்டேன்” என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.