சுமந்திரனுக்கு விசுவாசமாக இருங்கள் விஜயகலா பிரசாரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.ஏ.சுமந்திரனுக்கு நீங்கள் அனைவரும் விசுவாசமாக இருக்க வேண்டும் என ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும் புகிறேன்.
– இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத் திற்குட்பட்ட சமுர்த்திப் பயனா ளிகளிற்கு சமுர்த்தி உரித்து வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நண்பகல் நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, அரசமைப்புக்கு முரணாகச்செயற்பட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியபோது – அந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் சென்ற போது – எமக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சட்டத்தரணி கனக ஈஸ்வரனுமே நீதிமன்றத்தில் கதைத் தார்கள். அதனால் கிடைத்த தீர்வாலே ஆட்சி அமைத்தோம்.
இவ் ஆட்சியாலேதான் இன்று இங்குள்ள 3932 பயனாளிகளுக்கு சமுர்த்தி கிடைத்துள்ள து. எனவே நீங்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.