சிறுத்தைப் புலியை இறைச்சியாக்கி விற்றவர் கைது!!

சிறுத்தைப் புலிக் குட்டியை வேட்டையாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்கோயா சாஞ்சிமலை கிழ் பிரிவுத் தோட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இறைச்சி மீட்கப்பட்டது.
சிறுத்தைப் புலிக் குட்டியின் தலை, நான்கு கால்கள் மற்றும் ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.