இலங்கை வந்த மோடி மகிந்தவையும் சந்தித்தார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது இந்தியாவுடனான பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.