அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ள சர்சைக்குரிய வைத்தியரின் மனைவி!

குருநாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியின் மனைவி, அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார்.

4000 பெண்களுக்கு பலவந்த குடும்பக்கட்டுப்பாட்டை செய்ததாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்திக்குப்பின்னர், சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் எவையும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாக தெரிவித்து, நீதிமன்றத்தை நாடுவதற்கு, வைத்தியரின் மனைவி தீர்மானித்துள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.