புதிதாக எந்த அமைச்சரும் இனி இல்லை மைத்திரி!

நேற்றிரவு நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு அமைச்சர்களை புதிதாக இணைப்பதற்கான கடிதம் ஒன்றை ஐக்கிய தேசியின் தரப்பில் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது . இதனை உடனடியாக நிராகரித்த ஜனாதிபதி , புதிதாக எந்த அமைச்சரையும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறினார் .