20 அவுஸ்தி­ரே­லிய புல­னாய்வு அதி­கா­ரிகள் இலங்கையில்!

ஈஸ்டர் ஞாயிறு தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20 புல­னாய்வு நிபு­ணர்­களை இலங்­கைக்கு அனுப்­பி­யி­ருப்­ப­தாக, அந்த நாட்டின் உள்­துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரி­வித்தார்.

இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த அவர், செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே இந்த தக­வலை வெளி­யிட்டார்.

”தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீ­லங்கா புல­னாய்வுக் குழுக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20இற்கும் அதி­க­மான புல­னாய்வு அதி­கா­ரி­களைக்கொண்ட குழு­வொன்றை இங்கு அனுப்­பி­யுள்­ளது.

அவர்கள் இப்­போதும், இலங்கை அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து பணி­யாற்றி வரு­கின்­றனர். குறிப்­பாக தட­ய­வியல் பக்­கத்தில் அவுஸ்தி­ரே­லிய அதி­கா­ரிகள் உதவி வரு­கின்­றனர்.

மிக­வி­ரை­வாக இலங்கை அர­சாங்­கத்­துக்கு இந்த உத­வியை வழங்­கினோம். அவுஸ்­திரே­லிய காவல்­து­றையின் ஊடாக, கொழும்பில் உள்ள அவுஸ்­திரே­லிய தூத­ரகம் இதற்­கான பணி­களை ஒருங்­கி­ணைக்­கி­றது.

இரண்டு நாடு­க­ளுக்குமிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.