எமது மக்களின் பிரச்சினையை ஐ.நா விடம் கொண்டு செல்லவுள்ளோம்!

“எமது மக்களின் பிரச்சினை, எமது சமூகம் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் என்பன குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் சொல்லவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஐ நா பிரதிநிதியை இதற்காக விரைவில் சந்திக்கவுள்ளோம்.அதேபோல் இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளோம்.