இலங்கைக்கு நவீன இராணுவ கண்காணிப்பு கருவிகள்-சீனா

கண்­கா­ணிப்புக் கரு­வி­களை வழங்­கு­மாறு இலங்­கை­யி­ட­மி­ருந்து சீனா­வுக்கு கோரிக்­கைகள் எதுவும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்று இலங்­கைக்­கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரி­வித்­துள்ளார்.

 

தீவி­ர­வாத முறி­ய­டிப்பு பொறி­மு­றைக்­காக  கண்­கா­ணிப்புக் கரு­வி­களை சீனா வழங்­க­வுள்­ள­தாக வெளி­யா­கிய தக­வல்கள் குறித்து, எழுப்­பிய கேள்­விக்கே அவர் இவ்­வாறு பதி­ல­ளித்­துள்ளார்.

“இலங்­கை­யி­ட­மி­ருந்து கோரிக்கை விடுக்­கப்­பட்டால், சீனா உதவத் தயா­ராக இருக்­கி­றது. இது ­தொ­டர்­பாக இலங்கை அர­சாங்­கத்­திடம் இருந்து எந்தக் கோரிக்­கை­களும் விடுக்­கப்­ப­ட­வில்லை.

நாட்டின் இறை­மைக்கு சீனா முக்­கி­யத்­துவம் அளிக்­கி­றது. இன்­னொரு நாட்டின் உள்­ வி­வ­கா­ரங்­களில் எமது நாடு தலை­யீடு செய்­யாது. இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்பின் அடிப்­ப­டையில், அவ­சரத் தொலைத்­தொ­டர்புக் கரு­விகள், வெடி­பொ­ருட்­களை செய­லி­ழக்கச் செய்யும் கரு­வி­களை இலங்­கைக்கு சீனா அனுப்பி வைக்கவுள்ளது. எனினும் சீன இராணுவத்தினர் இதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.