இன்றைய ராசி பலன்கள் (07/06/2019)

மேஷம்

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இருந்தாலும், கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்:
– Advertisement –
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண்பழி விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
மிதுனம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
கடகம்:
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மகிழ்ச்சியான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவு தருவார். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
கன்னி:
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தாலும் செலவுகளும் தொடர்ந்து வரும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என்று இருப்பது வீண் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.
துலாம்:
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பயணம் தவிர்க்கவும்.
விருச்சிகம்:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
தனுசு:
மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். புதிய முயற்சியை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.
மகரம்:
இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியம் தலையிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் காரணமாக கோவம் அதிகம் வர வாய்ப்புண்டு. சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் உண்டாகும்.
– Advertisement –
கும்பம்:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனை குறைவாகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.
மீனம்:
இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.