ஆலயத்தை வட்டமிட்ட கருடன்..! ஆச்சாியத்தில் உறைந்த பக்தா்கள்.

சாவகச்சோி- பெருங்குளம் வீரகத்தி விநாயகா் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின்போது ஆலயத்தை சுற்றி கருடன் வட்டமிட்ட சம்பவம் அங்கிருந்த அடியாா்களுக்கு ஆச்சாியத்தையும், பக்தி பரவசத்தையும் உண்டாக்கியுள்ளது.
சாவகச்சேரி பெருங்குளம் அம்பலவாணர் வீரகத்தி விநாயகர் ஆலய மகா குடமுழுக்கின் போது, முதன்மைக் குருக்கள் உட்பட குருமார் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றுவதற்கு ஆயத்தமான வேளையில்
கருடன் ஒன்று ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து அங்கு நின்ற அடியார்களை ஆச்சரியப்படுத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.