போலிச் செய்திகளுக்கு 5 வருட சிறைத்தண்டனை!

 ஊடகங்களிங்கு ஆப்படிக்கின்றது இலங்கை அரசு?
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 5 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவது தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக, தண்டனைக் கோவைச்சட்டம் மற்றும் குற்றவியல் நியதிச்சட்டம் ஆகியவற்றின் ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,  (04) இதன்போது, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பதில் அமைச்சரான அரச நிர்வாகம், இடர்முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதர அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான குழு, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாகே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த தவறு தொடர்பில் குற்றவாளியாகும் ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் தண்டனை பணத்தை நிர்ணயிப்பதற்கு அல்லது 5 வருட காலத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிப்பதற்கு அல்லது 2 தண்டனைகளுக்கும் உட்பட்ட வகையிலேயே ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.