க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்க கோரி. மக்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பை ஆரம்பிக்கக் கோரி இன்றைய தினம் கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில்  கடந்த வருடம் க.பொ.த சாதரண தரத்தில் பரீட்டை எழுதி சித்தி எய்திய 17 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள் இணைந்தே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை   பாடசாலை முன்றலில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இந்த போராட்டம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு18 மாணவர்கள் காப்பாற்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சித்தி பெற்று இருக்கிறார்கள் அவர்களை வைத்து இந்த பாடசாலையில்  உயர்தர வகுப்பை ஆரம்பிக்குமாறு கோரியே இப் போராட்டம் இடம் பெற்றுக் கொணடிருக்கொண்டிருக்கின்றன. என் அடிப்படை உரிமையை தட்டிப் பறிக்காதே கல்விக் கடலில் கரை சேர கரம் கொடு கல்விக்கு கடிவாளம் இட்டு எம் முன்னேற்றத்தை தடுக்காதே எனது பள்ளிக் கனவை பாதியிலே சிதைக்காதே என் பாடசாலை கனவு தொடர பாடசாலையை தரம் உயர்த்து வளங்கள் இருந்தும் எம் பாடசாலையை தரம் உயர்த்தாதது ஏன் திறமைகள் நிருபிக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப் படுவது ஏன் தொலை தூர கல்வியை தொடராமல் தொலைவதா எம் பிள்ளைகளின் வாழ்வு துளிர்விட்டு தளைக்கும் வாழ்வை இடையிலே தொலைப்பதா எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் ஒளி ஏற்று போன்ற பல்வேறு கோஷங்களை முன்வைத்தே போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கும் போது தாம் பருத்தித்துறை வலய கல்வி பணிப்பாளர் மாகாண கல்விப் பணிப்பாளர் பிரதேச செயலர் மாவட்ட செயலர் ஆகியோருடன் பல தடவைகள் தொடர்பு கொண்டு பாடசாலையை தரமுயர்த்தக் கோரியதாகவும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதாலேயே இன்று இப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாகாண கல்வி அமைச்சை தாம் தொடர்பு கொண்டபோது பருத்தித்துறை வலயக் கல்வி பணிமனை தமது பாடசாலையை தரமுயர்த்துவதற்க்கான எந்தவித முன் மொழிவுகளையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.இது தொடர்பாக பருத்தித்துறை வலய கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பாடசாலை தரம் உயர்த்துதல் தொடர்பில் தமக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் மாகாண கல்வி திணைக்களத்திற்க்கே அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் காலை 10:30 மனியளவில் போராட்ட இடத்திற்கு சமூகமளித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் போராட்டத்தை இன்று கைவிடுமாறும் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களுடன் பிற்பகல் 4:00 மணிக்கு ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து இதற்க்குரிய தீர்வை உடனடியாக பெற்றுத் தருவதற்க்குரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் 10:25 மணியளவில் தற்காலிகமாக கைவிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பிரதேச செயலருக்குரிய மகஜரை கிராம சேவகரிடம் கையளிக்கப்பட்டது.