ஆனந்தசங்கரியை தேடிச் சென்ற கனடா தூதுவர் டேவிட் மக்னொன்!

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை நேற்று மாலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியுடன் கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இதனிடையே, சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் இவ்வாறான ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை விரும்புவதாக டேவிட் மக்னொன் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.