வைத்தியர் மொஹமட் ஷாபி தங்களுக்கு கருத்தடை 737 முறைப்பாடுகள் பதிவு

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மட்டும் 629 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஏனைய 108 முறைப்பாடுகள் தம்புள்ளை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

வைத்தியர் மொஹமட் ஷாபி தங்களுக்கு கருத்தடை செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவரிடம் சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும் முறைப்பாடுகளில் பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.