விரைவில் புதிய கிழக்கு ஆளுநராக லக்ஷ்மன் பியதாச ? மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் ?

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.
ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறியமுடிந்தது. இவர்களின் பதவியேற்பு நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இதுவரை உத்தியோக பூர்வ அறிவித்தல்கள் விடப்பட்டிருக்கவில்லை