இன்றைய ராசி பலன்கள் (06/04/2019

மேஷ ராசி
உங்கள் ராசிக்கு லக்கினத்தில் சந்திரன் இருப்பதால் கேது சாரம் பெற்று நிற்பதால் முன் கோபப்பட வேண்டாம்.தன்னுடைய முயற்சியால் வெற்றி காண்பதும், வீடு வாகனசேர்க்கை யோகமும், திருமண யோகமும் உண்டாகும். அதன் படி,மேஷ ராசிக்கு இன்று யோகமான நாள்.
ரிஷப ராசி
உங்கள் ராசிக்கு 12ல் சந்திரன் இருப்பதால் கேது சாரம் பெற்று நிற்பதால் சகல சுகபோக யோகம் தரும் நாள். எதிலும் தைரியமாக செயல்படுவதும், எதையும் ஆழமாக யோசிக்க வேண்டாம். மன்னிக்கும் குணம் வைக்க வேண்டும். இன்றைய ரிஷப ராசிக்கு யோகமான நாள்.
மிதுன ராசி
உங்கள் ராசிக்கு 11 சந்திரன் நிற்பதால் கேதுவின் சாரம் பெற்று இருப்பதால், தொழில் துறையில் அதிக லாபம் தரும் நாள். ஆனால் யாரிடமும் கோபப் படாமல் லாபத்தை வாங்க வேண்டும். திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் வரும். இன்றைய மிதுன ராசிக்கு லாபகரமான நாள்.
கடக ராசி
உங்கள் ராசிக்கு 10ல் சந்திரன் இருப்பதால் கேது உடைய சாரம் பெற்று நிற்பதால் வேலை வாய்ப்பில் பதவி உயர்வும், வீடு வாகன சேர்க்கையும் உண்டாகும். ஆனால் வரும் யோகத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் தாமதமாகிவிடும். அதனால் அமைதியாக இருக்க வேண்டும். இன்றைய கடக ராசிக்கு பதவி உயர்வு நாள்.
சிம்ம ராசி
உங்கள் ராசிக்கு ஒன்பதில் சந்திரன் இருப்பதால் கேது உடைய சாரம் பெற்று நிற்பதால், வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும், எடுத்த முயற்சியிலும் வெற்றயும் கிட்டும். ஆனால், முன்கோபம் மட்டும் வேண்டவே வேண்டாம். அதோடு, நீங்கள் இன்று யாரையும் தேடிப் போக வேண்டாம். இன்றைய சிம்ம ராசிக்கு யோகமான நாள்.
கன்னி ராசி
உங்கள் ராசிக்கு 8ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் யாரிடமும் டென்ஷனாக வேண்டாம். முன்கோபம் வேண்டாம். நகைச்சுவை உணர்வுடன் இருப்பதே நன்று. வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும். இன்றைய கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், கடவுளை தியானித்து வருவது மிக நன்று.
துலாம் ராசி
உங்கள் ராசிக்கு 7ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்ற நிற்பதால், திருமண யோகமும், ஆன்மிக நாட்டமும், எதிலும் நேர்மையாக செயல்படுவதுமாக இருப்பீர்கள். மேலும், பொதுநலனில் மீதும் அக்கறை உண்டாகும். இன்றைய துலா ராசிக்கு யோகமான நாள்.
விருச்சிக ராசி
உங்கள் ராசிக்கு 6ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று இருப்பதால் எதிலும் தைரியமாக செயல்படுவதும், ஆனால் முன் கோபப்பட வேண்டாம்.சாதுவாக இருக்க வேண்டும். வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய விருச்சிக ராசிக்கு தைரியமாக செயல்படும் நாள்.
தனுசு ராசி
உங்கள் ராசிக்கு 5ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று இருப்பதால்புதிய சொத்துக்கள் வாங்குவதும், திருமண யோகமும் குழந்தைச் செல்வமும், தொழில் துறையில் அதிக லாபமும் கிடைக்கும். ஆனால் வரும் யோகத்தை மட்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம். மௌனமாக இருக்க வேண்டும். இன்றைய தனுசு ராசிக்கு யோகமான நாள்.
மகர ராசி
உங்கள் ராசிக்கு 4ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று இருப்பதால் வீடு வாகன சேர்க்கை யோகமும், வேலை வாய்ப்பில் பதவி உயர்வும், திருமண யோகமும் உண்டாகும். இன்றைய மகர ராசிக்கு யோகமான நாள்.
கும்ப ராசி
உங்கள் ராசிக்கு 3ல் சந்திரன் நிற்பதால் கேதுவின் சாரம் பெற்று இருப்பதால் எந்த முயற்சியிலும் தைரியமாக செயல்படுவதும், அஷ்டலட்சுமி கடாட்சம் யோகமும் திருமண யோகமும் கணவன்-மனைவி பாசமாக வாழ்வதுமாக இருப்பீர்கள். இன்றைய கும்ப ராசிக்கு யோகமான நாள்.
மீன ராசி
உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று இருப்பதால் வீட்டில்தனசேர்க்கை யோகமும், எதிலும் வெற்றி அடைவதும், எதையும் அமைதியாக செயல்படுவதும், திருமண யோகமும், வேலைவாய்ப்பில் பதவி உயர்வும் கிடைக்கும். மொத்தத்தில் இன்றைய நாள் மீன ராசிக்கு யோகம் தான்