ஆனி மாத ராசி பலன்  

ஆனி மாத ராசி பலன்  
கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் – ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் – ராசி மாற்றம் இல்லை
புதன் – 11ம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார்
குரு – ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் – 20ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
சனி – ராசி மாற்றம் இல்லை
ராகு – ராசி மாற்றம் இல்லை
கேது – ராசி மாற்றம் இல்லை
மேஷம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், நிலம், வீடு வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சீரடையும், 11ம் தேதிக்கு பிறகு புதிதாக வீடு வாங்குவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும், நண்பர்களால் நன்மை உண்டாகும. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள் 20ம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பிரயாணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.
ரிஷபம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், பூர்வீக வீடு கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்ற செல்வீர்கள், வெளியூர் தொழில் வாய்ப்புகள் மேன்மையடையும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, எதிரிகளால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 20ம் தேதிக்கு பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும், உடலில் அசதி அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாரால் தொல்லை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளின் உதவி கிடைக்கும், தொழில் உத்தியோகம் சிறப்படையும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும், சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். . உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள், 11ம் தேதிக்குப் பின்னர் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும், திருமணமாகாத மகன்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், 20ம் தேதிக்குப் பின்னர் தகவல் தொடர்பு சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும், வியாபாரம் காரணமாக அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாரத வகையில் பண வரவு உண்டாகும்.
கடகம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை உண்டாகும், உத்தியோகத்தியத்திற்காக அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், நண்பர்களால் நன்மை உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளில் கவனம் தேவை 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும், அம்மாவின் ஆதரவும் உதவியும். கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், மனதில் நினைப்பவை எல்லாம் நிறைவேறும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் ஏற்படும் சச்சரவைத் தவிர்க்கவும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் 11ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும், நல்ல சுப மங்கலத் தகவல் கிடைக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் வீண் விரயங்கள் உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
கன்னி
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளிடம் கோபத்தை தவிர்க்கவும், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், அனைவரிடமும் தன்மையாக பேசுவீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிற[ப்படையும், வாகனங்களை ரிப்பேர் செய்து பராமரிப்பு செய்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
துலாம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள், அப்பாவின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உதவும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள், அம்மாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி நிலை சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வ நிலை சிறப்பாக இருக்கும், குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொழில் நிலை மேன்மையடையும் 20ம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும், நண்பர்களால் நன்மை ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் செயல்கள் மன சங்கடத்தை ஏற்படுத்தும், அலுவலக ரீதியாக மனதில் அழுத்தம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், சகோதரர்களுடன் நல்லுறவு நீடிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம் கவனம் தேவை 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் நன்மைகள் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை, விலை மதிப்பு மிக்க பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்லவும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் தொழில் காரணமாக வெளியூருக்கு செல்வீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சையும் வாக்குவாதத்தையும் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஏற்றுமதி தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாற்றம் உண்டாகும்.
தனுசு
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாடகை வருமானம் அதிகரிக்கும், பேச்சில் குதற்க்கத்தை தவிர்க்கவும், புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் சங்கடம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும், புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பின்னர் குல தெய்வ வழிபாடு சிறப்பைத் தரும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், மனதில் மந்தத் தன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சினை தவிர்க்கவும்.
மகரம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் தொல்லை உண்டாகும், எதிரிகளால் பயம் ஏற்படும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், செயல்களில் வேகம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லைக்கு ஆளாக நேரிடும் 11ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தன வரவு அதிகரிக்கும், செயல்கள் சிறப்படையும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் சங்கடங்கள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அதிகமாக செலவழிப்பதை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.
கும்பம்
சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும், சிவன் கோயில் வழிபாடுகள் நன்மையைத் தரும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும், வீட்டை ரிப்பேர் செய்வதன் மூலம் செலவுகள் உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 11ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், மனதில் நிம்மதி உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பின்னர் உறவினர்களின் விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வங்கி சேமிப்பு உயரும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடுகள் சிறப்பைத் தரும்.
மீனம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும், அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் சமயம் இது. செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும், வீடு நிலம் போன்றவற்றிலிருந்து வருமானம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் 11ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு பண வருமானம் அதிகரிக்கும், மன சஞ்சலத்தை தவிர்க்கவும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை உருவாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்கான முயற்சிகள் வெற்றியடையும், செயல்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் மறதி உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும்.