ஹிஸ்புல்லா முஸ்லிம் அல்ல? வெடித்தது புதுப் புரளி…

இலங்கையை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள். எவருமே எதிர்பாராத நேரத்தில் நடந்த இத் தாக்குதல்களால் நிலைகுலைந்தது இலங்கை.
இத் தாக்குதல்களின் பின்னர் பல்வேறு தேடுதல்கள், கைதுகள், விசாரணைகள் என்று பாதுகாப்பு தரப்பினர் தமது அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இத் தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும், நாடுகளும், தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பு இத் தாக்குதல்களை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டதும், இலங்கை முஸ்லிம் மக்கள் இத் தாக்குதல்கள் தங்கள் மார்க்கத்திற்கு எதிரானது என்று கொதித்ததோடு, இத் தாக்குதல்களை நடத்தியவர்களை கைது செய்து செய்யவும் உதவினர்.
இலங்கையில் பல இடங்களில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்றும் பரவலாக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன.
அதேபோன்று தான், இவ் வாரம் கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள். இது பெரும்பாலும் வரவேற்கப்பட்டது.
ஆனால், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இது தொடர்பில் தன்னுடைய எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார். அவர் இது தொடர்பில் பேசிய போது,
கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம்.
அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.
இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.
ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது. தௌஹீத் பள்ளிவாசல்களை உடைப்பதோ தப்லீக், தௌஹீத், சூபிஸம் வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதன் ஊடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.
எனவே இதுதொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களாகும்.
இதைவிடுத்து இப்பிரச்சினை தொடர்பில் மார்க்கத்திற்கு முரண்பாடான செயற்பாடுகள் எங்காவது நடைபெறுமாக இருந்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் தலைமைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றினால் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
தவிர ஊர்களில் நினைத்தவர்கள் எல்லாம் தங்களின் சொந்த விருப்பத்திற்கு பள்ளிவாசலை உடைக்கின்ற நிலைமையினை ஏற்படுத்திவிடக்கூடாது.
இவ்வாறான செயற்பாடுகள் மிகமோசமான நிலைமையினை ஏற்படுத்துவதோடு கடந்த யுத்தகாலங்களிலே சகோதர இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதினூடாக எவ்வாறான விளைவுகளை சந்தித்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக இச்சம்பவத்தினை கண்டிப்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்.
அத்துடன், தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்ற வேறுபாடுகள் வித்தியாசங்களை உருவாக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் முஸ்லிம்கள் “லாயிலாஹ இல்லழ்ழாஹ்” எனும் கலிமாவை சொன்னவர்கள் எங்களுக்குள் பலவேறுபாடுகள் இருக்கலாம்.
எனவே இந் சூழ்நிலையில் மிகக்கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக பள்ளிவாசல்களை உடைப்பது, இன்னும் ஒரு குழுவுக்கு எதிராக அறிக்கைகளை விடுவது, காட்டிக்கொடுப்பது, சந்தர்பத்தினை பயன்படுத்தி அரசியல் ரீதியாக பழிவாங்க முனைவது, சந்தர்பத்தினை பயன்படுத்தி மார்க்கரீதியான பிளவுகளை தூண்ட முனைவதெல்லாம் மிகமோசமான பாதகமான அல்லாஹ்வினால் மன்னிக்கமுடியாத குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இவ்வளவு கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், அவர் ஏன் இது தொடர்பில் கொதித்து எழுகின்றார் என கேள்வி எழுப்பப்டுகிறது.
நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியதாக கருதப்படும் இந்த அமைப்பிற்கு ஆதரவாக அவர் செயற்படுகின்றார் என ஏற்கனவே குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், இன்று அவர் அதனை நிரூபிக்கும் வகையில் செயற்படுகின்றார் என்கிறார்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.
ஆக, தான் எந்தக் கொள்கையில் செயற்படுகின்றார் என்பதை கிழக்கு ஆளுநர் அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தன்னுடைய செயற்பாடுகளின்வழியாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ரவுப் ஹக்கீம், ரிசாட் மற்றும் பல பெரும் முஸ்லீம் தலைவர்கள் எல்லாம் மௌனமாக உள்ள நிலையில் ஹிஸ்புல்லாவின் கொந்தளிப்பு அவர் முஸ்லிம் அல்ல என்பதை வெளிப்படையாக நிரூபித்துள்ளது.
சஹ்ரானுடன் தொடர்புடையதாக இலங்கையில் புலனாய்வுத் துறையால் அவதானிக்கப் பட்ட தௌஹீத் பள்ளிவாசல் கெகிராவை, மடாடுகம பிரதேச உண்மையான முஸ்லிம்களால் உடைக்கப்பட்டு சமூகத்தை குழப்பும் தௌஹீத் பள்ளிவாசல்களை இலங்கையில் அழிக்க வேண்டும் என மக்கள் கொந்தளிக்கும் நிலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது ஹிஸ்புல்லா குற்றம்
சுமத்துவது அம் மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் ஒட்டு மொத்த முஸ்லிம்களைிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக முஸ்லிம் அன்பர் ஒருவர் தெரிவித்தார்.
அத மட்டுமல்லாது ஆளுநர்
ஹிஸ்புல்லா உண்மையான முஸ்லிம் மார்க்கம் அல்லாத சஹ்ரான் பின் பற்றும் தீவிர வாத அடிப்படை முஸ்லிம் மார்க்கத்தை பின்பற்றுவது உறுதியாகியுள்ளதாக முஸ்லிம் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.