வைத்தியருக்கு எதிராக இதுவரை 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி என்பருக்கு எதிராக இதுவரை 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

40 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத குழு அவருக்கு வழங்கியதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வைத்தியர் சாஃபியின் பெயரிலுள்ள 17 காணி உறுதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த காணிகள் குருநாகலை சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, சந்தேகநபரான வைத்தியர் மேற்கொண்டதாக கூறப்படும் சில சத்திர சிகிச்சைகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகின.

இந்நிலையில் தற்போது முறைப்பாடுகளின் எண்ணிக்கை 500ஆக உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.