வீடு சென்றார் ஹிஸ்புல்லா! ரிசாத்தின் பதவியை பறிக்க ஜனாதிபதி உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமைய ஹிஸ்புல்லா இராஜினாமா செய்துள்ளார்.
ஹிஸ்புல்லாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதினை அவரது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி அறிவித்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.