வவுனியாவில் இரவில் ஏற்பட்ட கோர விபத்து

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இரவு 7.40 மணியளவில் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயமடைந்த நிலையிலும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.