பௌசி வீட்டில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம் எம்.பிக்கள்! அடுத்தடுத்து என்ன நடக்கும்?

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்க கோரி ஆங்காங்கே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் தற்போது கொழும்பில், பௌசி வீட்டில் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசியலில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதில் ஆராயப்பட்டு வருகின்றன.
அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஓரளவு ஆதரவு அதிகரித்து செல்வதாக தோன்றுவதால், அரசு நெருக்கடியில் இருக்கிறது.
இந்த நிலையில் மூவரையும் தற்காலிகமாக பதவி விலகுமாறு கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் பதவிவிலகக்கூடாது என முஸ்லிம் சமூகத்திற்குள் வலியுறுத்தப்பட்டு வருகிறது