நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு

விகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் எசமானின் தொண்டர்களினால் ஆசாரபூர்வமாக காளாஞ்சி வழங்கப்பட்டது.

நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சம் எதிர்வரும் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.