தர்மசக்கர ஆடை விவகாரம்: கைதான பெண்ணுக்கு பிணை

தர்­மசக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்ட மஹியங்கனை – ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண்ணை  பிணையில் விடுவிக்க  மஹியங்கனை நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

 

பாத்திமா மஸாஹிமா எனும் குறித்த பெண்ணையே இவ்வாறு ஒரு இலட்சம் ரூபா சரீரைப் பிணையில் செல்ல மஹியங்கனை நீதிவான் அனுமதித்தார்.

தர்மச் சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்து பெளத்த  மதத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யதன் ஊடாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயற்­சித்­த­தாக குறித்த பெண் மீது ஹஸலக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.