குற்றவாளிகளா ? நிரபராதிகளா ? ஜனாதிபதி, பிரதமர் தெரியப்படுத்த வேண்டும் – சம்பிக்க

ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோர் குற்றவாளிகளா?அல்லது நிரபராதிகளா ? என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரி  உண்ணாவிரதத்தில்  ஈடுப்பட்ட அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்து அவரத உடல் நலத்தை விசாரிப்பதற்கான  அமைச்சர் சம்பிக ரணவக்க இன்று கண்டி தலதாமாளிகை வளாகத்துக்கு சென்றிருந்தார்.

இதன்போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு ஆகியோருக்கு  எதிர்ப்பு தெரிவித்தே அதுரலிய ரத்ன தேரர்  இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவர்கள்  மீது  ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாக இருந்தால் அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆளுனர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  ஜனாதிபதி  தலையிட்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

விசாரணைகளுக்கு  அமைவாக  மூவரும் குற்றவாளியாக இருந்தால்  அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவும்நிரபராதிகளாயின் அதனை நிரூபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  காரணம் தற்போது  நாட்டில்  பாரிய அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.  இவ்வாறானவொரு நிலைமையில் இந்த செயற்பாடுகள்  நாட்டில்  வன்முறைகளாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.