ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.
மேற்படி விடயத்தை மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டிய சிறந்த நபர் சஜித் பிரேமதாச எனவும் அவர் கூறியுள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஏற்கனவே தெரிவு செய்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.