உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ரத்தன தேரர்!

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த அத்துரலிய ரத்தன தேரர், தனது போராட்டத்தைக் கைவிட்டார். இதையடுத்து அவர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, இன்று நான்காவது நாள்களாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.
53 friends like this Jaffnazone . com