ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பின் 2289 பேர் கைது!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் வடமேல் மாகாணம் மற்றும், ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமைய, இதுவரை 2289 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களுள் 432 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் 1655
பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.