வவுனியாவில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு ; அதிகாரிகள் அசமந்தம்

வவுனியா வேலங்குலம் கிராமத்தில்  காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

நேற்றைய தினம் (01) மாலை குறித்த கிராமத்தில் விவசாய காணி ஒன்றுக்குள் புகுந்த யானை 6 தென்னைகளையும் சுமார் 25 க்கும் மேற்பட்ட  வாழை மரங்களையும் முற்றாக சேதமாகியுள்ளது.

ஏனைய மாமரங்கள், பூசனி என்பவற்றை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக் கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும்,  கிராமத்திற்குள் யானை உள்நுளையாதவாறு வேலி அமைத்து தருமாறு கிராம மக்கள் உரிய அதிகாரிகளை கேட்டும் இதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரையும் மேற்கொள்ளவில்லையெனவும் மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.