சீனன் குடா கடலில் வெடி கொளுத்தி எறிந்த-மாவை சேனாதிராஜா

இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்கள் எதிர்காலம் தொடர்பாக நிதானமாகச் சிந்தித்துப் பயணிக்க வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று நடைபெற்ற சமூர்த்தி நிவாரண உருதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதும் அவர்கள் மீள முழுமையாக கட்டியெளுப்பபடவில்லை.தமிழர்கள் விடயத்திலும் இன பிரச்சனை விடயத்திலும் ஆரம்பக் காலத்திலிருந்து இன்றுவரை அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை.தமிழன் வரலாற்றில் 60 ஆண்டுகளாக இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம்.தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.

போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசினை கொண்டு வந்தோம்.இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி  கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார்.எங்களை அவர் ஏமாற்றி விட்டார்.

நல்லாட்சி அரசில் நீண்டகால பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு தீர்வாகக் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது.பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாகக் கூடவிருந்தது அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது.ஆனால் அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராகக் கொண்டு வந்தார்.இதனால் வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.

தற்போது ஜனாதிபதி இந்தியாவிற்குச் சென்றிருந்த சமயம் டெல்லியில் ஊடகவியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை எமக்கு வருத்தம் அளிக்கின்றது.தமிழினின் வரலாற்றில் நாம் ஆரம்பத்திலிருந்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் கூட அதிகமாகத் தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.போரிலும் தமிழர்களே அதிகமாகக் கொன்று அழிக்கப்பட்டனர்.

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேச கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்வில் அக்கறை அரசு செலுத்தவில்லை.இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம்.என்றார்.