பெண் மீது பாலியல் பலாத்காரம்:இரு இளைஞர்கள் கைது

34 வயது நிரம்பிய திருமணமான பெண் மீது 17 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதால் பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்ட குற்றசாட்டின் பேரில் இளைறுர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும் நீதிபதி அவ்விருவரையும் எதிர்வரும் 11ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

பதியத்தலாவைப் பகுதியின் சரனகம என்ற இடத்தைச் சேர்ந்த பெண்மீதே பலாத்கார பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பதியத்தலாவைப் பொலிஸார் இவ் இரு இளைஞர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவ்விருவரும் தெகியத்தகண்டிய மஜிஸ்ரேட் நீதிமன்றத்தினால் நேற்று ஆஜர் செய்ததும் நீதிபதி இளைஞர்கள் இருவரையும்  வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு  அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் நீதிபதி பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பலாத்கார பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்ட பெண் நோய்வாய்ப்பட்ட நிலையில்  பதியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.