குருநாகல் வைத்தியருக்கு எதிராக இதுவரை 429 முறைப்பாடு!

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரையில் 429 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குருணாகலை போதனா வைத்தியசாலை, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில், மற்றும் தம்புள்ளை காவல்துறை நிலையம் ஆகிய இடங்களில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குருணாகலையில் இன்று மட்டும் 82 முறைப்பாடுகள் பதிவாகியதுடன், அங்கு பதிவான மொத்த எண்ணிக்கை 286.
மேலும் விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.