இன்றைய ராசி பலன்கள் (01/06/2019

மேஷம்:
மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.
ரிஷபம்:
– Advertisement –
வெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
மிதுனம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
கடகம்:
உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.
சிம்மம்:
தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஆனால், தாய்மாமனின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி:
இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். ஆனாலும், அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
துலாம்:
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தியைக் கேட்பீர்கள். நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.
விருச்சிகம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
தனுசு:
இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.
மகரம்:
காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.
– Advertisement –
கும்பம்:
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுக்கிரன் அருளால் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள்