அனைத்து ஆலயங்களும் முன்மாதிரியாக செயற்பட விக்கி அழைப்பு!

இளைஞர், யுவதிகளும் எமது வயதில் மூத்த அரசியல்வாதிகள் போல் கிடைத்ததைச் சுருட்ட எத்தனித்தார்களானால் எமது வடகிழக்குமாகாணம் பறிபோய்விடும். தந்து தந்தே எம்முடைய கழுத்தை அறுத்துவிடுவார்கள் பெரும்பான்மையினர் நாமும் சிறிய உதவிகளில் மனம் மயங்கி பெரிய உரிமைகளைத் தவறவிட்டு விடுவோமென எச்சரித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.
யாழ்ப்பாணத்தில் ஆலய நிகழ்வொன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் அரசாங்க அனுசரணைகளையும் நாங்கள் தகுந்த சிந்திப்பின் பின்னரே பெற்றுக் கொள்ளவேண்டும்.
எம்மவர்களின் அரசியல் பின்னணிகளில் பாரியமாற்றங்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இன்றைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளையுடையவர்களாக வாழ்கின்றனர். அவர்களுக்கான உதவிகளை வழங்க அனைத்து ஆலயங்களும் முன்வரவேண்டுமெனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிலும் ஆலய அறங்காவலர் சபைகள் முன்னுதாரணமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் விவகாரத்தில் முன்னின்று செயற்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.