சிவாஜிலிங்கம் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்கு ஜீலை 12 திகதி

2018 ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரது பிறந்தநாளை கொண்டாடினார் என்றும் விடுதலை புலிகள் தொடர்பான பணர் ஒன்றும் வைத்திருந்தார் என்றும் குற்றஞ்சாட்டி முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் மீது பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் வல்வெட்டி துறை போலீசார் வழக்கு பரித்தித்துறை நீதவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.அந்த வழக்கிற்று இன்று முன்னிலையாகுமாறு எம் கே சிவாஜிலிங்கம் அவர்களுக்கு பருத்தித்துறை  நீதவான் நீதி  மன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. இதனால் இன்று மன்றுக்கு முன்னிலையாகிய எம் கே சிவாஜிலிங்கம் அவர்களுக்களை மன்று வளாகத்தில் வைத்து குறித்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குமாறு கௌரவ நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.இதனடிப்படையில் எம் கே சிவாஜிலிங்கம் மன்று வளாகத்தில் வாக்குமூலம் வழங்கினார். குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்கிற்க்கு மூத்த சட்டத்தரணி சிறிகாந்த அவர்கள் ஆஜராகியிருந்தார்.இந்நிலையில் குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஜீலை மாதம் 12 ம்  திகதிக்கு தள்ளிப் போடப் பட்டுள்ளதாகவும் . இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்படாமலிருக்க முன் பிணை கோரிய மனு சட்டத்தரணி நடராசா சுஜீவன் தாக்கல் செய்திருந்தார்.இம் மனு மீதான விசாரணை ஜீன் மாதம் 7 ம் திகதி எடுத்துக் கொள்ளப் படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்