ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்களைமலேசியக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மலேசிய பாதுகாப்பு பிரிவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்புப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டுள்ளதக அறியமுடிகிறது.கைதுசெய்யப்படடவர்கள் மலேசியர், இந்தோனேசியர். மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும், 28 வயதுக்கும் 42 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.