வியாழக்கிழமை, 30 மே 2019 இன்றைய நாள்:

மேஷம்
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
ரிஷபம்
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
மிதுனம்
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
கன்னி
நவீன வாகன யோகம் ஏற்படும். நல்ல விதமாக வருமானங்கள் கூடும். அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றிக் கிடைக்கும். நீண்ட நாட்களாகக் கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம்
அதிக தனலாபம், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.
கடகம்
தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் உண்டு.
துலாம்
புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெறிகரமாக நிறைவேறும்.
மீனம்
பல வழிகளிலும் தனலாபம் ஏற்படும். ருசியான நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள் ஆகியவை கிடைக்கும். கிடைக்கும் பணத்தை வைப்பு நிதியாகப் போட்டு வைப்பது நல்லது.
தனுசு
சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள்.
விருச்சிகம்
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவி உண்டு.
கும்பம்
சுமாரான பணவரவு வந்தாலும், மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும். சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம்.