நல்லூர்க் கந்தனிற்கு வந்த சோதனை! வெளியே தடை

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கற்பூரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் இடம்பெற்றது.
பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், வள்ளியம்மை,தெய்வயானை நாயகியருக்கும் ஆலய வசந்தமண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெறும் .
தொடர்ந்து அலங்காரக் கந்தன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி வெளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கும் மாலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பின் நிமித்தம் முருக்கபெருமான் வெளி வீதிவலம் வருவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.