யாழ். சிட்டிவேரம் ஆலய 10ம் திருவிழா நாளில் வாழ்வாதர உதவிகளை வழங்கிய புலம்பேர் உறவுகள்!

யாழ். தென்மராட்சி வரணி சிட்டிபுரம் அருள்மிகு. கண்ணகி அம்மன் ஆலய 2019ம் ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவ திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 10ம் நாள் திருவிழா ஆகிய இன்றைய தினம் 10ம் திருவிழா உபயகாரர் ஆகிய வரணி இயற்றாலையைச் சேர்ந்த தமிழ் உறவுகளின் (ஐரோப்பிய வாழ் வரணி இயற்றாலை மக்கள்) நிதி உதவியில் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், போராளி மாவீரர் குடும்பம் மற்றும் பாடசாலை மாணவர்கள் சிறுவர் இல்லம் போன்றவற்றுக்கு மனிதநேய பணியை செய்தனர்.

கிளிநொச்சியில்

உதவி விபரம்
1. 15 வருடத்திற்கும் மேலக போராளியாக இருந்த இரு பிள்ளைகள் காணாமல் போன போராளிகளின் பெற்றோருக்கு நல்லின் ஆடு வழங்கப்பட்டது.

2. கணவனை இழந்து 5 பெண் பிள்ளைகளுடன் வாழும் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு முட்டிடை இடும் கோழிகள் மற்றும் அவற்றுக்கான கோழித் தீவனம் என்பன வழங்கப்பட்டது.

3. 4km தூரம் நடந்து பாடசாலை செல்லும் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது

4. 3km தூரம் நடந்து பாடசாலை செல்லும் யுத்தத்தில் தந்தையை இழந்த  மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது

5. 7Km தூரம்சென்று சிரமத்தின் மத்தியில் கல்வி பயிலும் உயர்தர பிரிவு யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவிக்கு சைக்கிள் வழங்கப்பட்டது

6. கிளிநொச்சி Asset நிறுவனத்தில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டிற்கு ஏற்ப சிறப்பாக வடிவமைப்பில் கற்றல் செயற்பாட்டிற்கான மேசை வழங்கப்பட்டது

நிதி அன்பளிப்பு செய்த வரணி இயற்றாலை உறவுகளுக்கு  நன்றி தெரிவித்தனர் மக்கள்.