அநீதிக்கு எதிராக போராடும் வரணி கண்ணகி புரம் மக்கள்

ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவதை உறிதிப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 10:30 மணியிலிருந்து இரண்டாவது நாளாக  யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இவ் ஆலயத்தில் தேர் உற்சவத்தின் போது பிற சமூகங்கள் தேர் வடம் பிடிக்க கூடாது என்று தெரிவித்து ஜேசீபி கனரக வாகனம் மூலம் தேர் இழுக்கப்பட்டது.இந்நிலையில் தென்மராட்சி பிரதேச செயலகம் ஊடக பல தடவைகள் பாதிக்ப்பட்ட 7 ம் மற்றும் 9 ம் திருவிழா உபயகாரர்கள் தொடர்பு கொண்டு உரிய நியாயங்களை பெற்றுத் தருமாறு கோரியிருந்த நிலையில் கடந்த 17/05/2019 அன்று சாவகச்சேரி  பிரதேச செயலர் தலமையில் யாழ் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் பாதிக்ப்பபட்ட உயபகாரர்கள் பாதிப்புக்களுக்கு காரணமானவர்கள் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் யாழ் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கிராம சேவகர் பிரதேச கலாசார உதியோகத்தர் ஆகியோர் ஒருங்கிணைந்த இவ்வருட வைகாசி விசாக பொங்கல் இடம் பெறும் இதில் அந்தத்த திருவிழா உபய காற்களே அந்தந்த திருவிழாக்களின் பொறுப்பாளர்கள் என்றும் ஆலயத்தில் சாமி காவுதல் தேர் இழுத்தல்கள் எல்லாம் இடம் பெறும் என்ற இணக்கப் பாடு எட்டப்பட்டது.இது இவ்வாறு இருந்தும் கடந்த 20/05/2019 அன்று இடம் பெற வேண்டிய திருவிழா மிக நூதனமான முறையில் நன்கு திட்டமிட்டு நிறுத்தப்பட்டது இதனால் கவலை அடைந்த மக்கள் தென்மராட்சி பிரதேச செயலகம்  முன்பாக 22,23./05/2019 ஆகிய தினங்கள் கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர் ஆனால் அங்கும் எதுவும் பயனளிக்காத நிலையில் இன்று  இரண்டாவது நாளாக  ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து தமது சத்தியா கிரக போராட்டத்தை தொடர்கின்றனர்.புதிய ஜனநாயக மாஸ்சிச லெனின் கட்சியின் வட பிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன் காரைநகர் சமூக மேம்பாட்டு கழக பிரதிநிகிகளான கி.கோவிந்தராசா மா.யோகநாதன் சி.வரதராசா மற்றும் சிமிழ் கண்ணகைபுர கிராம மக்கள் என சுமார் ஐம்பது பேர்வரை கலந்து கொண்டுள்ளனர்.இதற்க்கு பூரண பாதுகாப்பினை கொடிகாமம் பொலீசார் வழங்கிக் கொண்டிருக்கிருக்கின்றனர்