பிரேசில் சிறைச்சாலை கலவரத்தில் 56 பேர் பலி: தப்பியோடியவர்களை தேடி வரும் போலீசார்

வடக்கு பிரேசிலில் நெரிசல் மிகுந்த ஒரு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.

சிறைச்சாலை கைத்திருக்கும் கைதிகளின் உறவினர்கள்சிறைச்சாலை கைத்திருக்கும் கைதிகளின் உறவினர்கள்

இந்த கலவரத்தின் போது தப்பியோடிய பல கைதிகளை வடக்கு பிரேசில் போலீசார் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஏற்பட்ட அமேசோனாஸ் மாநிலத்தில் மனோஸ் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தப்பியோடிய 87 கைதிகளில், 40 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில்

இதனிடையே, சிறைச்சாலை கலவரத்தில் பலியானவர்களை அடையாளம் காண உள்ளூர் பிணவறைக்கு வெளியே ஏரளாமான குடும்பங்கள் திரண்டுள்ளன. பலியானவர்களில் சிலரின் தலை வெட்டப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கிய இந்த சிறைச்சாலை வன்முறை, தொடங்கியதற்கு 17 மணி நேரத்திற்கு பிறகே முடிவடைந்தது.

கடந்த பல ஆண்டுகளில் பிரேசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான கலவரம் இதுவாகும்.