நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராக மீண்டும் ருத்ரகுமாரன் தெரிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சுவார்த்தை குழுவில் அங்கம்வகித்த விசுவநாதன் ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் பிலடெல்பியா நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்றின் சபாநாயகராக சரஸ்வதி தேவராஜாவும் (அமெரிக்கா), ரஜனிதேவி சின்னத்தம்பி (சுவிட்ஸர்லாந்து) பிரதி சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் பிரதமராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தலைமை தாங்குவதற்கு ருத்ரகுமாரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு புதிய நாடாளுமன்றத்திற்காக உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக உலகளவில் பல்வேறு நாடுகளில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.