தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வைக் கொண்டுவர வேண்டும்! – இந்திய பிரதமருக்கு விக்கி கடிதம்

இலங்கையில் தமிழ் மக்களின் உரி­மைகள், பாதுகாப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்­புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டு வ­ருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்க ­வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்­திர மோடிக்கு அனுப்பியுள்ள கடி­தத்தில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கி­னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் ‘இலங்­கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகி­யவற்றை உறுதிசெய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்டுவருவதற்கான நடவ­டிக்கைகளை தலைமை ஏற்று முன்­னெடுக்கவேண்டும்.
“இலங்கை தமிழ் மக்கள் உங்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்களிடம் பல விடயங்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்­களில் தொடர்ந்து அரசாங்க அடக்கு­முறை, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகிய­வற்றின் பாதிப்புக்களினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்­றனர்.
இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஐக்­கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, இறைமை மற்றும் சுய மரியாதையை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்­கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தி­யிருந்தீர்கள்.
இந்தியா தனது அயலவர்கள் சந்தோசமா­கவும் திருப்தியாகவும் இருப்பதை உறுதிசெய்யும் நேரம் வந்திருக்கின்­றது. மோடி ஆட்சிக்கு முதன் முதலில் வந்தபோது நவீன இந்தியாவின் சிற்பியாக அவர் திகழ்வார் என்று சுவாமி வியானந்தஜி குறிப்பிட்டமை சரியாகி விட்டது இந்த தேர்தல் வெற்றி ஒரு பெரு வெற்றியாகும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்