2000 வருடங்களிற்கு முற்பட்ட மயானம் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டது!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கன்னியா நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்தில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் தினைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார்.
இந்த மயானம் சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் காணப்பட்டன.
புதையலுக்காக அந்த கல்லறைகள் தோண்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது..